முள்ளில் விழுந்த சேலை

(கே. சஞ்சயன்)
உலகத்தையே உறைய வைத்த குண்டுத் தாக்குதல்களுடன் கழிந்து போயிருக்கிறது இந்த வருட ஈஸ்டர் திருநாள். தேவாலயங்களும் சொகுசு விடுதிகளும் இரத்தமும் சதையுமாக, கோரமாகக் கிடந்த காட்சிகள், ஊடகங்களில் நிரம்பியுள்ள நாள்களாகவே, இப்போது கழிந்து கொண்டிருக்கின்றன.