யாருக்கு அருகதை உண்டு தமிழர் தரப்பில்…?

(சாகரன்)
2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவைத் தொடர்ந்த யுத்தமற்ற சூழலுக்கு பின்ரான அரசியலைப் பேசவிளையும் பதிவு இது. தாம் சொல்லும் அரசியலை பாராளுமன்றத்தில் கிளிப்பிள்ளைப் போல் சொல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) உண்மையான பன்முகத் தன்மை கொண்ட பல கட்சிகளின் ஐக்கியப்பட்ட அமைப்பா…? என்றால் இல்லை என்ற பதிலை நாம் யாரும் மறுக்க மாட்டோம்.