யார் இந்த பறையர்கள்? ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

பறையர்
இலங்கையின் மலையகத்தை பொறுத்தமட்டில் அதிகபடியான மக்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்த “ஆதிப்பறையர்கள்”
ஆரம்ப காலங்களில் “பறையர்” என்றால் தமிழ் இனத்தின் மூத்த குடிகள் என அர்த்தம் இருந்தது பிற்காலத்தில் அது திட்டமிட்டே இல்லாமல் ஆக்கப்பட்டு “பறையர்” என்றால் வெறுமனே பறை அடிப்பவர் என்ற அர்த்தத்தோடு மட்டுப் படுத்திவிட்டனர்.
அதிலும் பறை அடிப்பது என்பதை ஒரு சாதிய அடையாளமாக்கி அதை கீழ்மைப் படுத்தி ஆதிகால பறையர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களை திட்டமிட்டே கீழ்நிலை தொழில்கள் என தரம் பிரித்த தொழிலை செய்ய வைத்து அது அவர்களுக்கான குலத் தொழில் என ஆக்கிவிட்டனர்.