போராட்டம் தொடர வேண்டும்

தமிழ்மக்களின் நிலங்கள் சமயதலங்கள் அபகரிக்கபட்டுள்ளன, என்று நில மீட்பு, சமயதலங்கள், மீட்பு என அண்மையில் போராட ஆரம்பித்த சிவில் அமைப்புகளும், சமயபீடங்களும் , சமரசம்பேச புறப்பட்டுள்ளன, போராட நினைத்தால் சமரசம் தேவையில்லை, திருகோணமலையில் இனங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது ,எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள், சமய தலைவர்களுக்கு‌ம் மதிப்பும், மரியாதையும்உண்டு , தமிழ்மக்களுக்கு பிரச்சினை அரசு நிறுவனமான தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், வனஇலக்கா இப்படியான அரச நிறுவனங்கள், தமிழ்மக்களின் நிலங்கள் சமயதலங்கள் என்பவற்றை ஆக்கிரமிப்புசெய்துள்ளனர்,இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் அல்லது வேறு போராட்டம் மூலம் தமிழ் மக்களின் பூர்வீகநிலங்களையும், சமயதலங்களையும், மீட்கும்வரை போராட்டம் தொடர வேண்டும், இதற்காக போராடுவதற்கு எல்லா தமிழ்மக்களுக்கும், சிவில்அமைப்புகளுக்கு‌ம் மக்கள்பிரதிநிதிகளுக்கு‌ம், உரிமைஉண்டு என்பதை வலியுறுத்துகிறேன்.

(Sathiyan)