யார் இந்த பறையர்கள்? ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

உண்மையில் “பறை” என்ற சொல்லில் உண்மையான அர்த்தம் பல உண்டு

பாதுகாவலன்,
ஆதிகாலத்தில் மக்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விலங்குகளின் தோல்களினால் ஆன பறைகளை அடித்து பாரிய ஓசை எழுப்பியே அவற்றை விரட்டி அடித்து மக்களை பாதுகாத்தனர்.

சந்தோஷப்படுத்துபவன்
ஆதிகால மனிதனுக்கு வேட்டையாடுவது ஒன்றே தொழில் ஏனைய நேரங்களில் அவன் இந்த பறை இசையால் தான் பொழுதை கழித்தான்

செய்தியாளன்
ஆதிகாலத்தில் மன்னன் நாட்டு மக்களுக்கு சொல்லும்
சேதியை சொல்ல இந்த பறையக் அடித்தே மக்களை ஒன்று திரட்டி அந்த சேதியைச் சொன்னான்

படித்தவன்
ஆதிகாலத்தில் பறையர்கள் வெறுமனே பறை இசைப்பதோடு மட்டுமல்லாது அந்த இசைக்கேற்ப பாடல்களையும் மெட்டுக்களையும் இயற்றி பாடினான்

புலவன்
பறையர் அவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப தம் உணர்வுகளை சொல்லி பாடிய போது அதனை உருவாக்கிய போது அவர்கள் புலவர்கள் ஆனார்கள் பிற்காலத்தில் அவர்களின் சந்ததியே பல புராணங்களை எழுதினர்.

கடின உழைப்பாளி
கடின உழைப்பாளியாக இருந்திருக்கிறார்கள். ஆதிகாலத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே வேட்டைக்கு பின்னர் வெறுமனே படுத்து ஓய்வெடுக்காமல் வேட்டையாடிய விலங்குகளின் தோல்களை எழும்புகளை தங்கள் பயன்பாட்டுக்கொ கொண்டு வர உழைத்தனர் அவர்களே பறையர்கள்.

இப்படி பறையர்கள் பற்றிய விடயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். பறையர் என்பது வெறுமனே தமிழர்களின் ஒருபகுதி சாதியினர் என திட்டமிட்டே ஆக்கப்பட்டு விட்ட நிலையில் தமிழர் அனைவருமே பறையர்கள் தான், பின்னர் அதிலிருந்துதான் ஒவ்வொரு சாதியாக உருவாக்கிக் கொண்டு பிரிந்து சென்றனர் என்பது, எனது ஆய்வின் முடிவு.

விரைவில் இந்த “பறையர் ” பற்றிய நூல் வெளியிடுவேன் அப்போது மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

மேலே தரப்பட்டுள்ள படத்தில் நான் மேலே சொன்ன பறையர்கள் யார். என்ற விளக்கத்துக்கு உதாரணமாய் வாழ்ந்த தமிழுக்கு தொன்றாற்றிய முக்கியமான “பறையர்” களில் சிலர்

சுவாரசியமான ஒரு விஷயம். திருவருட் பிரகாச வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிகள் நாத முடிவில் இருக்கும் இந்த பரை நிலை தனக்கு வாய்க்க வேண்டுகிறார். அதுவே ஒரு சர்ச்சையாயிற்று. ஏனெனில் ‘நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே அங்கே நானும் வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே’ என அவர் பாடியதை திருவருட்பா எதிர்ப்பு பிரச்சாரக் குழுவில் சுட்டிக்காட்டினார்கள். சைவ அறிஞரான யாழ்ப்பாணம் கதிரை வேற்பிள்ளை அவர்கள், இறைவன் முடி மேல் தான் அமர வேண்டுமென வள்ளலார் பாடுவது மருட்சியால் எனவே அது அருட்பா அல்ல மருட்பா என கூறினார்.

இந்த் கூட்டத்தில் குமரி மாவட்ட சதாவதானி செய்கு தம்பி பாவலர் இருந்தார். அவர் எழுந்து மேற்கூறிய உண்மையை விளக்கினார். நாதர் என்பது அச்சுப்பிழையாக இருக்கலாம். அது நாத முடி நாதம் என்றால் பிரணவம். அதன் மேல் இருக்கும் சந்திர நிலை . அங்கே வர வள்ளலார் விரும்புவதையே அவ்வாறு பாடியுள்ளார் என பாவலர் விளக்கினார். சைவ மக்கள் பாவலரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

அது அச்சுப்பிழையாக இருக்கக் கூட வாய்ப்பில்லை. ஏனெனில் திருவாரூர் இரத்தினசபாபதி ஐயா விளக்குகிறார்:

தொழில் நிலையில் சீவர்களை இயக்கும் போது ஐந்து நிலைகளில் சிவன் இருக்கிறார்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், நடராசர், இடபாரூடர், கல்யாண சுந்தரர் என்பவை அவை. இவற்றில் சந்திரசேகரரே மகாநிர்வாண தந்திரத்தில் ’மானுட உடலில் சோம மண்டல ஒளியில் சிரசில் விளங்குபவர்’ என கூறப்படுகிறார்.

எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். எனவே பறையர் எனும் பொருள் ஆழ்ந்த பொருள் கொண்டது. இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை.

இப்போது சென்னையில் எங்கோ என்றோ கட்டப்பட்ட அந்த ப்ளெக்ஸின் புகைப்படத்தை எடுத்து அந்த வரிகளைப் பார்க்கிறேன்: ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு!’

தகவல் தொகுப்பு ; கேஜி