ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி

(புருஜோத்தமன் தங்கமயில்)
எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.