ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்….” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர்.