வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்
நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு
மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்
அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)