வேண்டாம் சாதி மத இன பேதங்கள்

தனக்குப் பிடித்தமான பெண் இன்னொருவனுடன் பழகுவதை சகிக்க முடியாத பழக்கம் நமஅதஉ சமூகத்தைப் பிடித்த நோய்.நமது புராணங்களும் இதிகாசங்களும் பெண் விவகாரங்களை வைத்தே புனையப்பட்டவை.பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பவை.அதைவிட தமிழக சீரியல்களும் சினிமாக்களும் சமூகத்தில் கலை என்ற பெயரால் வக்கிரங்களை திணிக்கின்றன.இளம் வயதினரை தவறான வழிக்கு கொண்டு செல்வதில் இவற்றுக்கும் கணிசமான பங்கு உண்டு.

நமது வளர்ப்பு முறை,கல்வி,கலாச்சாரம் எல்லாம் தவறானவை.படித்தவர்கள் தமஅதஉ கல்வி வளத்தை முழுமையாக சமூகத்துக்கு பயன்படுத்துவது இல்லை.நமது சமூகத்தில் கொலைகளை ஊக்குவித்ததில் ஆயுதக் குழுக்களின் தாக்கமே அதிகம்.இதில் புலிகளுக்கே பெரும் பங்கு உண்டு.சிறுவர்களை கொலைகளை செய்ய ஊக்குவித்தவர்கள் புலிகளே.

இங்கே ஒரு இளைஞன் தன்னை விரும்பாத காதலியை பழிவாங்க இன்னொரு இளைஞனை கொலை செய்ததாக தகவல்கள் வருகின்றன.தனக்கு கிடைக்காத ஒருத்தி இன்னொருவனுக்கு கிடைப்பதை சகிக்கமுடியாத மிருகத்தனம்.கொடுமை.அதைவிட நட்பாக பேசி அழைத்துச் சென்று கொலைமுயற்சி.என்ன வரட்டுத்தனம் முரட்டுக்குணம்.

ஆபத்து வரும்போது உண்மையான அண்ணன் தம்பி பாசம் வெளியே வரும்.திருகோணமலையில் பஸ் நிலையத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.சண்முக வித்தியாலத்துக்கு அபாயா அணிந்து வந்த இஸ்லாமிய ஆசிரியைகளுக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்

ஐந்து தமிழ் மாணவர்களை கடற்படையினர் சுட்டுக் கொன்றபோது கண்ணீர் வடித்தார்கள்.இனவாதம் அராஜகம் என்றார்கள்.

மல்லிகைதீவில் சிறுமிகளை சிலர் கற்பழித்தபோது மதவாதம் பேசி ஒற்றுமையாக ஊளையிட்டார்கள்.ஆனால் இன்று
அதே திருகோணமலையில் இன்று ஒரு இளைஞன் உயிருக்காக போராடி உதவி கேட்டபோது எவனுமே உதவ முன்வரவில்லை.பரிதாபமாக அந்த இளைஞன் இறந்துவிட்டான்.

சாதி,இனம்,மதம் மொழி என வாய் கிழியக் கத்துபவர்களே எங்கே போனது இனப்பற்று,மொழிப் பற்று மதப் பற்று?ஆபத்துக்கள் வரும்போது இந்தப் போலி வேசங்கள் எல்லாம் தானாகவே கலைந்து போகும்.

சாதி மதம் மொழிபற்று எல்லாம் ஆபத்து வரும்போது உதவாது.மனித நேயம் மட்டுமே கை கொடுக்கும்.