1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 3)

(அந்தோணி!)

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.