ஆப்கான் கனிமங்கள் மீது சீனா கண்

தலிபானின் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிலேயே உலகில் அதிகமான லிதியம் காணப்படுகின்றது.ஏனைய பெறுமதியான வளங்களும் காணப்படுகின்றன.

இந்த வளங்கள் நான்கு தசாப்கால மோதல்களால் முடக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன,முதலில் சோவியத்யூனியனுடான மோதல்,அதன் பின்னர் பழங்குடி இனத்தவர்களுடனான மோதல் அதன் பின்னர் அமெரிக்காவுடனான மோதல். ஆப்கானை வளமான எதிர்காலத்தை நோக்கி கொண்டுசெல்வதற்கு பதில் பெண்கள் உரிமைகள் உட்பட ஏனைய உரிமைகள் விடயத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்போவதாக தலிபான்கள் தங்கள் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தி வருவதால் இந்த நிலை தற்போதைக்கு மாறப்போவதில்லை.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் சிரேஸ்ட கேர்ணல் தர அதிகாரியாக 2003 முதல் 2020 பணியாற்றிய ஜூபோ நியுயோர்க் டைம்சில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அமெரிக்கா விலகிச்செல்வதுடன் காபுலிற்கு தேவைப்படும் முக்கியமான விடயத்தை – அதாவது அரசியல் பக்கச்சார்பின்மை பொருளாதார முதலீடு ஆகியவற்ற சீனாவால் வழங்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் ஆப்கானிஸ்தானிடம் சீனா மிக முக்கியமானதாக கருதும் விடயம் உள்ளது- உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை கட்டுமானம், இந்த விடயத்தில் சீனாவின் திறமைகள் எவராலும் ஈடுகொடுக்க முடியாதவை,மேலும் ஒரு டிரில்லியன் பயன்படுத்தப்படாத அகழப்படாத கனிமங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்திருந்தார்.

இது சிறிதளவேனும் சாத்தியமாவதற்கு அடுத்த வாரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பது முக்கியமானது.

மிகவேகமான படை விலக்கல் காரணமாக முடிவிற்கு வந்த 20 வருட யுத்தத்தை தொடர்ந்து அமெரிக்கா-ஆப்கானில் உள்ள பாதிக்கப்படக்கூடிய அமெரிக்கர்களையும் அந்த நாட்டவர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அவசரஅவசரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

எந்த புதிய தலிபான் அரசாங்கத்தையும் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தக்கூடிய அதிகாரமும் சர்வதேச நிறுவனங்கள் தலிபான் அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை தடுக்ககூடிய அதிகாரமும் ஜனாதிபதி ஜோ பைடனிற்கு உள்ளது.

அமெரிக்கா தலிபானிற்கு எதிரான தடைகளை தொடர்ந்தும் பேணுகின்றது,மேலும் தீவிரவாத அமைப்பு மீதான ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சீனா ரஸ்யாவின் முயற்சிகளை தடுக்ககூடிய வீட்டோ அதிகாரமும் அமெரிக்காவிடம் உள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் தலிபான் ஆட்சியை பிடித்த அதேகாலப்பகுதியில் ஆப்கானிற்கு வழங்கவிருந்த 500 மில்லியன் டொலரை வழங்குவதை தடுத்து நிறுத்தியுள்ளது.

படையினரை விலக்கிக்கொள்வதற்காக ஓகஸ்ட் 31 ஆம் திகதி காலக்கெடுவை மீறவேண்டாம் என தலிபான் அமெரிக்காவிற்கு எச்சரித்து வரும் நிலையிலேயே இது இடம்பெறுகின்றது.

தலிபான் சாதகமான வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பாக – சீனாவுடன் உலகில் வழமைக்கு மாறான சீனா ஆப்கானிஸ்தானிடையேயான ஒத்துழைப்பில் தலையிடும் நிலையில் அமெரிக்கா இல்லை என அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

ஆப்கானிஸ்தான் பொருளாதாரரீதியிலும் மூலோபாய ரீதியிலும் சீனாவிற்கு முக்கியமானது. சீன தலைவர்கள் சீனாவிற்குஎதிரான பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிடுவதை தலிபான் நிறுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்திரதன்மையை பேணுவதற்கு வலுவான பொருளாதார உறவுகள் அவசியமானவை என அவர்கள் கருதுகின்றனர்.

ஆப்கானின் கனிமதொழில்துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்,

இதனை சீனா முதலீட்டுடனான உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் சீனாவிற்கே கொண்டுசெல்ல முடியும்.பாக்கிஸ்தானில் முன்னெடுக்கப்படும் 60 பில்லியன் திட்டங்களும் இதில் உள்ளடக்கம்.

தகுதிவாய்ந்த கொள்கை வகுப்பாளர்கள் இல்லாமையே தலிபானின் பெரும் பிரச்சினை என தெரிவிக்கின்றார் நிதி அமைச்சின் முன்னாள் ஆலோசகர் நெமடுல்லா பிசான்.

கடந்தகாலங்களில் அவர்கள் தகுதியற்றவர்களை மத்திய வங்கி நிதியமைச்சு போன்ற முக்கிய பதவிகளிற்கு நியமித்தார்கள்,அவர்கள் அதனை மீண்டும் செய்தால் அது ஆப்கானின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

2000ஆ ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் காபுலிற்கு அருகில் உள்ள மெஸ் அய்னாக்கில் அகழ்வில் ஈடுபடுவதற்கு சீன அரசாங்கத்தின் மெட்டர்லஜிகல் கோர்ப் நிறுவனம் 3 பில்லியன் டொலர் அனுமதியை பெற்றிருந்தனர்.

பாதுகாப்பு கரிசனைகள் முதல் வரலாற்று சின்னங்களை கண்டுபிடிப்பது போன்ற தடங்கல்கள் காரணமாக இதன் வெளியீடுகள் எவையும் கிடைக்கவில்லை, இன்னமும் புகையிரதமோ மின்நிலையமோ அமையவில்லை. இதனை மிகச்சிலரே நம்பிக்கொண்டுள்ளனர்.

இலக்குவைக்கப்பட்ட படுகொலைகள், இனச்சிறுபான்மை இனத்தவர்களின் படுகொலைகள்,வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்ட ஒடுக்குமுறைகள்,தலிபான்கள் உள்ளுர் பெண்களை திருமணம் செய்வதற்கு வேண்டுகோள் விடுத்தல் ஆகிய அனைத்தும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன- இவை அனைத்து சீனா -ஆப்கானிஸ்தான் உறவில் தாக்கம் செலுத்தக்கூடும்.

(தமிழ் மிரர்)