கனடியத் தேர்தல் நாள் இன்று

(சாகரன்)

உலகில் முதன்மைத் தொகை புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொண்டிருக்கும் கனடாவில் இன்று பொதுத் தேர்தல். கடந்த 2 வருடங்களாக சிறுபான்மை அரசாக செயற்பட்டு வந்த ஜஸ்ரின் ரூடோவின் லிபரல் கட்சியின் ஆட்சி அவர்களாலேயே வழமையான தேர்தல் காலத்திற்கு இரு வருடங்கள் முன்பே கலைக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் இது . கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாத காரணத்தால் பெரும்பான்மை பெற்ற இந்தக் கட்சி புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தனது ஆட்சி நடாத்தி வந்தது.