கொலம்பியா

(Love in the time of Cholera)
சர்வதேச மிருகவைத்திய மகாநாடு கொலம்பியாவில் உள்ள கட்டகேனாவில் நடப்பதாக இரண்டு வருடத்திற்கு, முன்பு அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் விரும்பிப் படித்த நாவல் லவ் இன் த ரைம் ஒவ் கொலரா(Love in the time of Cholera). அதை எழுதிய கபிரியல் மார்குவஸ் (Gabriel Garcia Marques) வாழ்ந்த இடம் மட்டுமல்ல அந்தக் கதை நிகழ்ந்த இடமும் கட்டகேனா.