சியோனிசத்தை முற்றாகத் தோற்கடிக்க பலஸ்தீனியர்கள் ஐக்கியப்பட வேண்டும்

(வானவில்)

மத்தியதரைக்கடல் ஓரத்தில் எகிப்திற்கு வடக்காக 365 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதிதான் பலஸ்தீன மக்கள் வாழும் காசா என்ற நிலப்பரப்பு. காசாப்பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் என்ற அமைப்பின் கீழுள்ளளது. இதைவிட காசாவிற்கு வடகிழக்குப் புறமாக, ஜோர்டான் ஆற்றிற்கு மேற்கு கரைப் பகுதியிலும் 5665 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பலஸ்தீன மக்கள் வாழுகிறார்கள்.