சிலியில் வெல்கிறார் இடதுசாரி வேட்பாளர்!

சிலி நாட்டில் வலதுசாரிக் கட்சியினரின் ஆட்சி கடந்த பல ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்ற கருத்து சிலி மக்கள் மத்தி யில் நிலவுகிறது.

ஆனால், ஒரு பகுதியினர் இதிலிருந்து மீள அதி தீவிர வலதுசாரி களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நவம்பரில் நடைபெற்ற முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 விழுக்காடு வாக்கு களைப் பெறவில்லை. அதனால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மீண்டும் இரண்டாவது சுற்றில் போட்டி யிடுகிறார்கள். யாரும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றில் அதி தீவிர வலதுசாரி வேட்பாளர் அன்டோனியோ கஸ்ட் முத லிடம் பிடித்தார். இடதுசாரி வேட்பாளர் போரிக் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

டிசம்பர் 19 அன்று நடைபெறும் இரண்டா வது சுற்றுத் தேர்தலில் இடதுசாரி வேட்பா ளர் காப்ரியல் போரிக் மற்றும் வலதுசாரி வேட்பாளர் அன்டோனியோ கஸ்ட் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.

கிரிட்டெரியா மற்றும் க்ளுடடனோ ஆகிய இரண்டு ஆய்வு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இரண்டு ஆய்வுகளுமே இடதுசாரி வேட்பாளர் காப்ரியல் போரிக் 54 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கின்றன.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகள் பெரும்பாலும் போரிக்கிற்குக் கிடைப்பதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அன்டோனியோ கஸ்ட்டுக்கு வாக்களிப் பார்கள் என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறு கிறது. கிரிட்டேரியா மற்றும் களுடடனோ ஆகிய இரண்டு கருத்துக் கணிப்புகளிலுமே இடதுசாரி வேட்பாளர் காப்ரியல் போரிக் சுமார் 54 விழுக்காடு வாக்குகளைப் பெறு வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் மீண்டும் இடதுசாரிப் பாதையில் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், சிலியிலும் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்கு கள் போரிக்குக்கு அதிகமாகக் கிடைக்கும் என்பதால், வாக்குப்பதிவு அதிகரித்தால் அதுவும் அவருக்கு சாதகமாகவே இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(Maniam Shanmugam)