நாடற்ற நகரம்

(Rathan Ragu)

கடந்த சில வருடங்களாக ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள நகரங்கள் நட்புரீதியான ஓர் இணைப்பை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நகரங்களுடன் ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் லண்டன்-இங்கிலாந்தின் புறநகரமான நியு மோல்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான நட்பு இணைப்பைப் பற்றிய செய்திகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகின. 2017 தை 14 அன்று ரொரன்ரோ நகரின் வட கிழக்கில் அமைந்துள்ள மார்க்கம் நகரம் முல்லைத்தீவு நகரத்துடன் ஓர் நட்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதே போன்று ரொரன்ரோ நகரம் கிளிநொச்சி நகரத்துடன் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.