நாடற்ற நகரம்

இவ்வாறான இணைப்புக்கள் அவை ஏற்படுத்தும் பொழுது கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தினார்களா? இதனால் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் பெற்ற அபிவிருத்திகள் என்ன? இவை யாவும் கேள்விக்குறியே. தேர்தல் காலத்துக் காளான்கள் போல் இவையும் இரு பகுதிகளுக்கும் வாக்குகளை பெற்றுக் கொடுத்தன. அதனதை; தவிர வேறு எதுவுமில்லை. இதே போன்றதே தமிழ் மரபு மாதமும். கடுங் குளிர் காலத்தில் வேட்டியும், குர்தாவும் அணிந்து படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்வதற்கு இவை உதவி புரியும். அதைத் தவிர வேறு எதுவுமில்லை. குர்தா தமிழ்க் கலாச்சாரம் எனக் கூறப்படும் கலாச்சார உடையில்லை. ஆனால் அவர்கள் அணிவார்கள்.

அதுவல்ல இங்கு முக்கியம். இலங்கையில் இனப் போர் உச்ச நிலையை அடைய முன்னர் பாலஸ்தீனத்தில் போர் உச்சத்திலிருந்தது. இயக்கங்களுக்கு அவர்கள் பயிற்சியுமளித்துள்ளார்கள். PLO Training என்பது பெருமையான விடயம். நாங்கள் பாலஸ்தீனத்தை மறந்து விட்டோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பாலஸ்தீனம் இன்று இரண்டு பிரிவுகளாக உள்ளன. ஒன்று மேற்கு கரைப் பகுதி மற்றையது காஸாப் பகுதி. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் காஸாப் பகுதியுள்ளது. இவ்விரண்டு பகுதிகளுக்குமிடையில் இஸ்ரேல் உள்ளது. இந்த பூகோள அமைப்பு தெரிந்திருப்பது அவசியம்.

David Osit அமெரிக்க இயக்குனர். இவர் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் மேயர். Ramallah பாலஸ்தீன மேற்கு கரைப் பிரதேசத்தில் PNA ன் நிர்வாகத் தலைநகரமாக செயல்படுகின்றது. ஜெருசலேத்திற்கு வடக்கில் சுமார் பத்து மைல்கள் தள்ளி அமைந்துள்ளது. 25 வீதமான கிறிஸ்தவர்கள் அங்கு வாழ்கின்றனர். இதன் மேயராக 2012லிருந்து Mousa Hadid உள்ளார். நகர மையத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட சமயத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தியே இந்த விவரணத் திரைப்படம் விரிவடைகின்றது. இதே காலகட்டத்தில் டொனால்ட் ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்கின்றார்.

அமெரிக்க உணவகங்கள் என மேற்கத்திய கலாச்சார வெளிப்பாடுகளை இந்த நகரத்தில் காணக்கூடியதாகவுள்ளது. சுற்றி வர இஸ்ரேல் இராணுவத்தின் அச்சுறுத்தும் துப்பாக்கிகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனிய இளைஞர்களுக்கும், இஸ்ரேலிய இராணுவத்துக்கும் தொடர்ச்சியாக முறுகல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இவற்றையெல்லாம் மீறி அன்றாட வாழ்வை அந் நகர மக்கள் வாழ்கின்றனர்.

லண்டன் வரும் மேயர் ஹடீட் நட்பு ஒப்பந்தங்களை லண்டன் நகர மேயருடன் ஏற்படுத்தவில்லை. மாறாக பெரும்பான்மை ஊடகங்களுக்கு தனது நகரமும் பாலஸ்தீனிய மக்களும் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். தங்களது நகர விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாது திண்டாடுகின்றார்கள். விவசாயம் செய்வாதற்கான நீரை அதற்குரியதற்றதாக இஸ்ரேல் செய்கின்றது. திட்டமிட்ட குடியேற்றங்களால் எங்களது நிலம் பறிபோகின்றது. ஒரு அச்சமான சூழலில் நாங்கள் தொடர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். எமக்கென ஒரு நாடில்லாமையால் நாங்கள் நாடற்ற பிரதேசத்தில் வாழ்கின்றோம் என நாடற்ற அந்த நகரத்தின் மேயர் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்.

இவரது செவ்விகள் மேற்கின் பல பிரதான தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பட்டன.

ஒடுக்கப்பட்ட தொடர்ச்சியாக ஒடுக்கப்படும் மக்களின் குரலாக Mousa Hadid உள்ளார். இப் படத்தில் மேயராக அல்லது அவராக அவரே தோன்றியுள்ளார். David Osit , Ramallah நகரையும் அதன் மேயரைப் பற்றியும் மட்டும் பதிவு செய்யவில்லை. பாலஸ்தீன மக்களின் வாழ்வையும், வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.

உலகின் ஒவ்வொரு நகரமும் தங்களுக்கு Mousa Hadi போன்ற மேயர் வரவேண்டும் என நினைப்பார்கள். இந்தப் படததைப் பார்த்த போது நான் வாழும், வாழ்ந்த நகரங்களில் ஏன் இவ்வாறான ஒரு மேயர் இல்லை என நினைக்கவைத்தது.

Photo courtesy Kokula Ruban