ருவாண்டா படிப்பினைகள் – 02

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

1994.04.06 ஆம் நாள் தன்சானியாவின் தலைநகரான டொடோமாவில் ருவாண்டாவிலிருந்து உகண்டாவில் அடைக்கலம் பெற்றிருந்தவர்களால் ருவாண்டாவில் நல்லாட்சி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ருவாண்டா நாட்டுப்பற்றாளர் முன்னணியானது (Rwandese Patriotic Front – RPF) வரலாற்று முக்கியத்துவம் மிக்க அமைதி ஒப்பந்தமொன்றில் அப்போதைய ருவாண்டா நாட்டின் குடியரசுத் தலைவர் ஜுவன்ட் கவியரிமான ( Juvend Habyarimana) உடன் கையெழுத்திட்டனர்.