இரவு நேர ஊரடங்கு போதுமா? மரணங்கள் மலியும் பூமி

(மொஹமட் பாதுஷா)

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.