“உலக காடுகள்தினம்”


“தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், சோற்றை குறைவான அளவிலும், மாத்திரைகளை அதிகமாகவும் விழுங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்”…
வனமும் வன உயிர்களின் பாதுகாப்பும் மிக அவசியம் என்பதை உணர்வோம்…
“மனிதன் இந்த பூமியில் நிம்மதியாக வாழ, பிறவுயிர்கள் வாழ்வது அவசியம்”
-இதிலும் சுயநலம்தான். இயற்கை வளத்தை சூரையாடிவிட்டால் இந்தபூமி மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலைக்கு சென்றுவிடும் அதனால் எதிர்கால நலன்கருதி
காட்டையும் காட்டுயிர்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுங்கள்…
முதலில் உங்களுக்கு என்னென்ன தெரியுமென பட்டியலிடுங்கள் பிறகு குழந்தைகளுக்கு சொல்லுங்கள் ….
உண்மையிலேயே இதுபற்றி பேசினால் அவர்கள் மிக மிக ஆர்வமாகி விடுவார்கள்….
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியமனவை
இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை
“காரணம்”
-வேண்டுமானால் நமக்குத் தெரியாமலிருக்கலாம்…
உதாரணமாக
கொசுக்களினால் பல நோய்கள் வருவதாக அஞ்சுகிறோம், என்னையும் எனது விஞ்ஞான அறிவையும் மிஞ்ச ஆளே இல்லையென்ற தலைக்கனம் கூட மனிதனுக்கு உண்டு…
நமது அறிவால் கொசுக்களை கட்டுப்படுத்தக் கூட இன்றுவரை முடியவில்லை…
நீரில்வாழும் பூச்சிகள், தட்டான், தலைப்பிரட்டைகளின் முக்கியவேலை என்ன தெரியுமா? சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களின் லார்வாக்களை உணவாக உண்பதுதான்…
பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல… நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்ந்தே அழித்து, சுற்றுச்சூழலுக்கு தீமையையே செய்கிறது. தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய தன்மையுடைய தவளைகள் குறைந்து போனதே, கொசுக்கள் பெருகுவதற்கு காரணம். தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் கொசுக்கள் முட்டையிடும் அவற்றை தலைப்பிரட்டைகள் தின்றுவிடும். கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் கருவை அழிக்கும் தவளைகள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன.
இப்பவாவது இயற்கையின் சமன்படுத்தும் கணக்கை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்…
கம்பளி புழுக்களைப்பார்த்தால் பலர் அருவருப்படைவார்கள் அந்தகம்பளிப் புழுக்காள்தான் நம் மனதைக்கவரும் அழகான வண்ணத்துப்பூச்சிகளாகிறது!..
வண்ணத்துப்பூச்சிகள் இல்லையென்றால் பலதாவரங்களில் மகரந்தச்சேர்க்கை இல்லாமல் முற்றாக அழிந்துவிடும் பிறகு? பலநோய்களுக்கு மருந்தே இல்லாமல் ஆகிவிடும்…
பூமி நாளுக்குநாள் வெப்பமாகிக்கொண்டே செல்கிறது இதேநிலை தொடர்ந்தால் கங்கைகூட வற்றிப்போகும் காலம்வரும்….
இதற்கெல்லாம் காரணம் இயற்கையை புரிந்துகொள்ளாமல்
எதிர்காலத்தில் ஏற்படும் விபரீதத்தை பற்றி சிறிதும் எண்ணாமல்
இந்தமண்ணிலுள்ள பல இயற்கைக்காடுகளை அழித்ததுதான் முக்கிய காரணம்…
மீண்டும் நினைவில்கொள்வோம்,
“மனிதன் உணவிற்காக இயற்கையை அழித்தது கொஞ்சம்தான் தன் ஆடம்பரத்திற்காக இதுவரை அழித்தத்தும் அழித்துக் கொண்டிருப்பதும் மிக மிக அதிகம்”…
மனிதனைத்தவிர எந்த உயிரினமும் இந்தப்பாதகத்தைச் செய்வதில்லை…
இயற்கை ஒருகட்டத்தில் தன்னை சரிசெய்துவிடும் ஆனால் மனிதஇனம் அப்போது பூண்டோடு அழிந்திருக்கும்!…
டினோசர் உட்பட சிறியதும் பெரியதுமான பல உயிரினங்கள் இந்தப்பூமியில் வேரற்றுப்போனதே அதற்கு சாட்சி…
குழந்தைகளுக்கு எதைச் சொல்லி வளர்க்கிறீர்களோ அவர்கள் அதன்மீது ஆர்வமாகி விடுவார்கள்….
இயற்கயை அதை பேணவேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொடுங்கள்…
வாழ்கைக்கு ” பணம்”-மிக மிக அவசியம்
ஆனால் ஒரு கட்டத்தில் அதைக்கொடுப்பற்கும்,வாங்குவதற்கும் ஒருவரும் இருக்கமாட்டார்கள்
இந்தப்பூமியில்!…
இந்த பூமியை காப்பாற்றுமளவிற்கு மனிதனுக்கு தகுதியோ திறமையோ இல்லை…
நம்மைக்காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது இயற்கையை இனி சீண்டாமல் இருப்போம்…
குழந்தைகளின் மனதிலும் இம் மண்ணிலும் எதைவிதைக்கிறோமோ அதுதான் முளைக்கும்…
மண்ணில் கூட நாம் விதைக்க முயற்சிக்கக்கூட அவசியமில்லை இயல்பாக விட்டால் பறவைகளே அதைப்பார்த்துக் கொள்ளும்….
இதற்கு மேலும் வெப்பநிலை அதிகரிக்காமல் இருக்கவும், காற்றைச் சலவை செய்யவும், மழையைப் பெறவும் இருக்கிற மரங்களையாவது வெட்டாமல் இருப்போம்…
நமது பரபரப்பான ஓட்டத்தைக் கொஞ்சம் குறைத்து சுற்றுப்புறத்தை சற்று உற்றுக்கவனித்தால், இயற்கை நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும், நம்மைச்
சுற்றி இருக்கும் பறவைகளையும், விலங்குகளையும், தாவரங்களையும் கவனியுங்கள். அவற்றின் பெயர்களும் இயல்பும் வாழ்க்கைமுறையும் மிக அழகானவை….
அவை நம்மிடம் பலவற்றைச் சொல்லும் கவனியுங்கள்…
இயற்கையை அல்ல நம்மைக் காத்துக்கொள்ளவாவது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்…