காலையில் மகாஜனாவின் முன்னாள் அதிபர் புலிகளால் கொலை!

மாலையில் மகாஜனாவின் பெயரில் கலாச்சார நிகழ்ச்சி!மகாஜனாக்கல்லுரியின் முன்னாள் அதிபர் திரு.க.நாகராஜா இன்று (07-10-2006) தெல்லிப்பழையில் வைத்து புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 1985 ஆண்டு மகாஜனாக்கல்லுரியின் அதிபராக பதவியேற்ற இவர், மகாஜனாக்கல்லுரியின் தற்போதைய அதிபர் திரு. சுந்தரலிங்கம் 1998 ஆண்டு மகாஜனாக்கல்லுரி அதிபராக பதவியேற்கும்வரை மகாஜனாக்கல்லுரியின் அதிபராகக் கடமையாற்றினார்.