கொவிட்-19: அதிகரிக்கும் தொற்று சொல்வது என்ன?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

முடிந்தது என்று நம்புவதற்கு தான், எல்லோருக்கும் விருப்பம். ஆட்சியாளர்களும் இவ்வாறே இதை, மக்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், யாதார்த்தம் என்னவோ வேறுபட்டதாக இருந்து விடுகிறது. ‘முடிந்தது’ என்றும் ‘ஒழித்து விட்டோம்’ என்றும், பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்னொருபுறம் அழிவு மெதுமெதுவாக முன்னகர்ந்து, ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, நாம் கண்முன்னால் காண்கின்றோம்.