சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்!

தனக்கு இருந்த நாவன்மையால், அடுக்கு மொழி அலங்கார பேச்சில் பேசி, ஒத்து மொத்த தமிழனையும் தன் மாயையில் விழ வைத்து , அவர்களை சிந்திக்க தெரியாத ஜடங்களாக ஆக்கியவரின் பிறந்த நாள்!

உன் முகத்தை மட்டும் காட்டு! முப்பது லட்சம் ஓட்டு விழும் என்று நடிகரை அழைத்து, தமிழனை விசில் அடிச்சான் குஞ்சுகளாக மாற்றியவரின் பிறந்த நாள்!

மொழி பற்று என்ற பெயரில், கல்லூரி மாணவர்களை தூண்டி, ஆர்பாட்டம், கலவரம் செய்வித்து, அதன் மூலம் அரசியல் லாபம் பெற்று, இன்று வரை ஓரளவும் ஹிந்தி மொழி அறியாதவர்களாக தமிழ் மக்களை ஆக்கியவரின் பிறந்த நாள்!

அடைந்தால் திராவிட நாடு! இல்லையெனில் சுடுகாடு என்று அடுக்கு மொழியில் அலங்கார மாக பேசி, இன்று வரை வடக்கு தெற்கு என்ற மாநில, மொழி வெறியில் தமிழன் திறிய காரணமாக இருந்தவரின் பிறந்த நாள்!

ஜாதி ஒழிப்பு வர்ண ஒழிப்பு என்ற பெயரில், வெறும் பார்ப்பனனை மட்டும் எதிர்த்து, மறந்தும் தாழ்த்த பட்ட மக்களுக்கு போராடாமல், தன் ஆதிக்க ஜாதிகள் நன்மைக்கு அரசியல் செய்தவரின் பிறந்த நாள்!

ஆங்கிலேயனின் ஆரிய திராவிட பொய்களுக்கு எண்ணெய் ஊற்றி, ஊரெல்லாம் நாடெல்லாம் பரப்பி, தமிழனுக்கு நாடி நரம்பெல்லாம் வெறியை உண்டாக்கி, கிறுஸ்துவ மிஷினரிகளுக்கு கை கூலியாக இருந்து, நாட்டில் பிளவை பிரிவினையை உண்டாக்க நினைத்தவரின் பிறந்த நாள்!

வேத புராண இதிகாச இலக்கியங்களுக்கு தன் மனம் போன போக்கில் , ஆபாச கதைகளை புனைந்து, கோவில் முன்பே மேடை போட்டு, தன் கட்சி தொண்டர்களை படு கேவலமாக பேச சொல்லி, அதை ஹிந்து மக்களையே கேட்க வைத்து, அவர்கள் விரலை விட்டு அவர்கள் கண்களிலேயே குத்த வைத்தவரின் பிறந்த நாள்!

நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல என்று ஊர் அறிய பேசி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்தவரின் பிறந்த நாள்!

திராவிட மாயையில் தமிழனை விழ வைத்து அவன் வாழ்வை நாசமாக்கியவர்களில் முன்னோடி!

திராவிடம் ஆரிய பேதம், வடக்கு தெற்கு பேதம், தமிழ் சமஸ்கிருத பேதம் , இனவெறி ,மொழிவெறி, மாநில வெறி, பிரிவினைவாதம், தனி நாடு, போன்ற அனைத்தும் இன்று தமிழனிடம் குடி கொண்டு உள்ளது என்றால் அதற்கு காரணமானவர்களின் பெருந்தலைவர்!

சி என் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள்! தமிழ் நாட்டின் இழவு நாள்!

அன்னாரின் விசில் அடிச்சான் குஞ்சுகளான தி க, தி மு க, அண்ணா தி மு க, போன்ற அனைத்து குஞ்சுகளுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்!

நாசமா போங்க!!!
(Kambathasan Dasan)