டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.