தகனமா? புதைகுழியா? சிறந்தது

(Dr. கனகசபாபதி வாசுதேவா)

நிஜத்திலிருந்து….. சட்ட மருத்துவம்
நாட்டில் ஒரு புறம் கொரோனா நோயினால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த நோயினால் இறந்த இரு முஸ்லீம் மக்களின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான முறையில் எரிக்கப்பட்டதினை தொடர்ந்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டுமா? புதைத்தால் ஆபத்தாய் முடியுமா? என்ற வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்பதிவில் இவை பற்றி ஆராயப்படுகின்றது.