இன்று ராஜிவ் நினைவு நாள்.

‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று
ஏய்க்கிறவனுக்கு இரையானதைத் தவிர
பிழையேதுமில்லை தமிழனிடம்.

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு .

ஆம்.என்ன அது?

ஒருபோதும் தாழ்ந்தவனில்லை தமிழன்.
அமெரிக்காவின்
சிலிக்கன் வேலியிலும்
தன் கொடி நாட்டுவான்.
விண்ணையும் சாடி சாதித்து வாழ்வான்.

ஆனால் –
வந்தாரையும் வாழ வைப்பான்.
அதுவே அவன் தனிக்குணம்.

வாழ வைப்பான்.
சாகடிக்க மாட்டான்.
ஒருபோதும்.

எனவே….
நச்சரவங்களுக்குப் பெயர்
தமிழன் என்று இருக்க முடியாது.

ராஜிவ்.
தமிழர் ஒருபோதும்
உங்களைக் கொல்லவில்லை.
கொல்லவும் மாட்டார்கள்.

எனினும் ஒரு களங்கம்.
அதைத்
துடைப்போம்.

_______________

இன்று
ராஜிவ்
நினைவு நாள்.

(Rathan Chandrasekar)

இந்தியத் தமிழர் இலங்கை தமிழரகளின் வாழ்வியலை மாற்றப் போட்ட நாள்…! இவரின் இன்று வரையிலான இருப்பு இலங்கை இந்தியா என்பதற்கு அப்பால் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் சீரிய வளர்ச்சிக்கும் எழுச்சிகளுக்கும் உறுதுணையாக இருந்திருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொல்லையாக மாறி வருவதை தடை செய்திருக்கும்.