அதிமுகவின் அராஜகச் செயலுக்கு கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகம் கிராம மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தி “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற தீர்மானம் நிறைவேற்றி வருகின்றது. இந்த இயக்கத்தில் கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை தடுப்பது அதிகார அத்துமீறலாகும். “கிராமசபை” என்ற பெயரைப் பயன்படுத்துவது ‘சட்டமீறல்’ என தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு வெளியிட்டு தனது ஆளுங்கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.