அதிமுகவின் அராஜகச் செயலுக்கு கண்டனம்

இதனைத் தொடர்ந்து இன்று (02.01.2021) கோவை மாவட்டம். தொண்டாமுத்தூர் பகுதியில் தேவராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம மக்கள் சபை கூட்டத்தில் அதிமுவினர் திட்டமிட்டு நுழைந்து கலகம் செய்துள்ளனர். வன்முறை மூலம் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வன்முறை ஆயுதத்தை எடுப்பது என்ற அஇஅதிமுகவின் முடிவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம். இதன் மூலம் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது என்பதை மக்கள் தீர்ப்பு உறுதி செய்யும்.
எதிர்கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் காவல்துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல், குற்றச் சம்பவங்கள் நிகழும் போது வெட்கமின்றி மௌனசாட்சியாக நிற்பது சட்டப்படியான கடமைப் பொறுப்புகளை மீறுவதாகும்.
அரசின் செயல்பாடுகள் மீது கருத்துக்களை வெளியிடுவது, ஆளும் கட்சியின் தவறுகளையும், அதிகாரிகளின் சட்ட அத்துமீறல்களையும் விமர்சிப்பது, மக்கள் ஆதரவைத் திரட்டிப் போராடுவது போன்ற அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள ஜனநாயக உரிமைகளை மறுப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அஇஅதிமுக அரசின் அராஜக செயலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.