“அது பெரிய கதை இப்போது சொல்ல முடியாது”

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் ஜனாதிபதியாக இருந்தபோது அரசாங்கத்துக்குள் கொள்கை பிரச்சினை ஏற்பட்டமையால், பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு, அன்று சபாநாயகராக இருந்த கரு ஜயசூரியவிடம் கேட்டேன், அதற்குப் பின்னர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாஸவிடம் கேட்டேன். ஐக்கிய தேசியக்கட்சியின் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் நிலை தலைவர்களிடம் கேட்டேன் அவர்கள் எவருமே முன்வராமையால், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன் என்றார்.

அன்று நான் எடுத்த தீர்மானமும் அதற்கு முன்னும் பின்னும் பெரிய கதை இருக்கின்றது. அந்த கதையை இப்போது சொல்ல முடியாது. அதற்கு நேரமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமர்ந்தார்.