அவசரகால சட்டம் நீடிப்பு

நாட்டில் கடந்த 3 மாதங்களாக அமுலில் உள்ள அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அவசரகால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணமிருக்கவில்லையென ஜனாதிபதி வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.