ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ மார்க்சிய‌ FARC இய‌க்க‌ம்

கொல‌ம்பியா ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌த்தின் விளைவாக‌, ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ மார்க்சிய‌ FARC இய‌க்க‌ம், இனிமேல் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ இய‌ங்கும். இய‌க்க‌ப் போராளிக‌ள், த‌ம்மிட‌ம் உள்ள‌ ஆயுத‌ங்க‌ளை ஒப்ப‌டைத்து விட்டு இய‌ல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற‌ன‌ர். ஊர் திரும்பும் முன்னாள் போராளிக‌ள் பாதுகாப்பின்மையை உண‌ர்கின்ற‌ன‌ர். ப‌ல‌ருக்கு ம‌ர‌ண‌ அச்சுறுத்த‌ல் விடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

முன்பு FARC க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ப‌குதிக‌ளில் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. முன்னாள் போராளிக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ம‌னித‌ உரிமை செய‌ற்பாட்டாள‌ர்கள், தொழிற்ச‌ங்க‌வாதிக‌ள் கூட‌ சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். த‌ற்போதும் ஆயுத‌ங்க‌ள் வைத்திருக்கும் வ‌ல‌துசாரி ஒட்டுக் குழுக்க‌ளே அந்த‌க் கொலைகளுக்கு கார‌ண‌க‌ர்த்தாக்க‌ள்.

கொல‌ம்பிய‌ நாட்டுப்புற‌ங்க‌ளில் ப‌ண்ணையார்க‌ள், நில‌ப்பிர‌புக்க‌ள், முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ளை பாதுகாப்ப‌தற்காக‌ அந்த‌ வ‌ல‌துசாரி ஒட்டுக் குழுக்க‌ள் உருவாக்க‌ப் ப‌ட்டிருந்த‌ன‌.புதிய ஆண்டில் வியூகங்கள் புதுப்பிக்கப்படுமா?..

(Kalai Marx)