இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் போதே எமது நாடு இந்தியாவின் கீழ் செயற்பட வேண்டிய நிலையை தோன்றிவிட்டது. எமது நாட்டின் சுயாதீன தன்மையும் இல்லாது போய்விட்டது. எனவே தற்போது ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வாறு எமது நாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது கை வைக்காமலும் இந்தியாவினால் எமது நாட்டின் மீது முன்னெடுக்கபடும் ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளின் போதும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்துச் செயற்பட தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புறகோட்டை பாகொடை வீதியில் அமைந்துள்ள தூய்மையான ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.utaja