இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இருவரில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்றயவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள என்று தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.