இரு கிராமங்கள் முற்றாக மூழ்கின

உப்பாறு மற்றும் மஜீத் நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனவும் இந்தப் பிரதேசங்களில் இருந்து 53 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் பாதிக்க்பபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் 139 குடும்பங்களைச் சேர்ந்த, 507 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதேச செயலாளர், இது சம்மந்தமான முழு அறிக்கையையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தம்பலகமம், கிண்ணியா போன்ற விவசாய நிலங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்போகம், சிறுபோகம் என நெற்செய்கை செய்கை பண்ணப்பட்டு வருகின்ற போதும் மாரி கால மழை நீரின் தாக்கம் நெற்செய்கையை அதிக வெள்ள நீர் அழிவடையச் செய்துள்ளது.