இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு ‘தமிழர்களுக்கும் உரிமை உண்டு’

‘இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால், மூவினங்களைச் சேர்ந்த மக்களும் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தையோ விடுதலைப் புலிகள் அமைப்பையோ சாராதவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகையினால், இறந்தவர்களை நினைவுகூர, சகலருக்கும் உரிமை உள்ளது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தமது உறவினர்களை நினைவுகூர, தமிழர்களுக்கும் உரிமை உண்டு. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் யாரேனும் செயற்பாடுகளை முன்னெடுத்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் கடமை,
பொலிஸாருக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

‘வடக்கில் தற்போது இவ்வாறு முன்னெடுக்கப்படு; செயற்பாடுகள், யுத்தத்தில் இறந்த மக்களை நினைவு கூரவே தவிர, விடுதலைப் புலிகளை நினைவு கூர அல்ல. வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்த வாரத்தை, நினைவு வாரம் என்று கூறியிருக்கின்றார். இறந்தவர்களை நினைப்பது அவர்களது உரிமை.

விடுதலைப் புலிகள் அமைப்பு, தடைசெய்யப்பட்ட அமைப்பாகும், எனவே அதற்குச் சார்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள், நாட்டின் நீதி முறைக்கமையத் தண்டிக்கப்படுவார்கள்.

அண்மையில் இறந்தவர்களை நினைவுகூருவதாகக் கூறித் தீபமேற்றிய செய்தி, ஊடகங்களில் வெளியானது. இந்தப் புகைப்படங்களில் 4 பேரே காணப்படுகின்றனர். அங்கு பொதுமக்கள் இல்லை’ என்றார்.