‘இலங்கைத் தமிழ் அரசியலில் திருப்புமுனை’ சுரேன் எம்.பி தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் அரசியலில் நேற்று முன்தினம் (24) திருப்புமுனை ஏற்பட்டதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் “இந்த விடயம் தொடர்பில் இப்போதாவது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தமிழ் அரசியலைப்பற்றி கரிசனையுடையவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும்” என்றார்.