இலங்கையின் ஆளும் வர்க்கம்

இதை சிங்கள தலைவர்களின் பெருந்தன்மை என்பதா அல்லது ஆளும் வர்க்கங்கள் அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன, ஆளையாள் பாதுகாப்பார்கள் என்பதா என விளங்கவில்லை.

வட மாகாணத்தில் கூட அரசாங்க பெயர்பலகைகளில் தமிழுக்கு முதலிடம் இருக்கக்கூடாது என அதை மாற்றியமைத்த அமைச்சர் விமல் வீரவன்ச கூட, சம்பந்தனின் வரப்பிரசாதங்களை தொடர்வதை ஆட்சேபித்ததாக தெரியவில்லை.

இதற்கிடையில், தான் அரசாங்கத்திடம் பல சலுகைகளை பெற்றுள்ளதாக தனக்கு எதிராக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தன் பாராளுமன்றத்தில் மூக்கால் அழுதிருக்கிறார்.

கொழும்பில் சொகுசு மாளிகை பெற்றதும், வேறு பல வரப்பிரசாதங்கள் பெற்றதும் சலுகைகள் அல்லாமல் வேறென்ன ஐயா?

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் புலிகளால் தனக்கு ஆபத்து என்று சொல்லி கொழும்பில் பாதுகாப்பான வீடும், குண்டு துளைக்காத காரும் பெற்றது சலுகைகள் அல்லாமல் வேறென்ன?

அதேநேரத்தில், அண்மையில் வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் தமக்கு அரசாங்கத்தில் வேலை பெற்று தரும்படி சம்பந்தனை சந்தித்து கோரியபோது, “அரசாங்கத்திடம் இப்படியான விடயங்களை கோரினால் பின்னர் இனப்பிரச்சினை பற்றி கதைக்க முடியாது” என சொன்ன சம்பந்தன், தங்களுக்கான தனிப்பட்ட சலுகைகளை அரசாங்கத்திடமிருந்து பெறும்போது மட்டும் தமிழர் உரிமைகள் பற்றிய நினைப்பு வரவில்லையா?

எல்லாம் வேசமும் நடிப்பும் தவிர வேறொன்றுமில்லை. நயவஞ்சகர்கள்!