இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.