இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு; 24 பேர் கைது- பின்னணி குறித்து புதிய தகவல்கள்

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள். நடந்தன.கொழும்பு விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு பறிமுதல்: பெரும் சேதம் தவிர்ப்பு
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன.

6 பேர் இந்தியர்கள்

குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர்.

தாக்குதல் நடத்தியது யார்?

இதனிடையே, இலங்கையில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நபர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புடன் தொடர்புடைய வெடிகுண்டுகளை கொண்டு சென்றதாக கூறப்படும் சிறிய ரக வேன் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வேனின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹித் ஜமாத் எனும் அமைப்பு குண்டுவெடிப்புகளை நடத்தக்கூடும் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் இவர்கள் இருக்கக்கூடும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன