இலங்கை: கொரனா செய்திகள்

பாணந்துறை- மோதரவில பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 450 பணியாளர்களுக்கு கொ​ரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, குறித்த நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்ததாக,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.