இலங்கை: கொரனா செய்திகள்

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார். குறித்த மூன்று மாவட்டங்களிலும், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.