ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம்!

 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உணரும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும், இதேவேளை, அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.