2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)

திருகோணமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி அறைகூவல்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (07.08.2016) திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடைய காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூடி அந்த கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றம் செய்து வடக்கு கிழக்கு எங்கும் வட்டாரங்கள் தோறும் அடிப்படைக் கிளைகளை அமைத்து ஒரு பரந்து பட்ட மக்களின் கட்சி ஒன்றை கட்டி எழுப்புதல் என்ற தீர்மானம் எடுத்திருந்தது. அதன் பிறகு தமிழர் சமூக ஜனநாயக கட்சியை ஒரு புதிய அரசியல் கட்சியாக பதிவதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையாளருடன் பேச்சு வார்த்தையும் நடாத்தப் பட்டிருக்கின்றது. மிக விரைவில் அந்த பதிவுக்கான முறையான விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். அதற்கான பதிவு மிகவிரைவில் நடைபெறும் என்று நம்புகின்றோம்.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியுடைய முதலாவது மத்திய கமிட்டி கூட்டம் இன்று திருகோணமலையிலே தோழர் திரு சுகு சிறீதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியுடைய மத்தியகமிட்டி கூட்டம் நடைபெற்றது. பல்வேறு தமிழர்களுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டு பல தீர்மானங்கள் மேற்கொள்ள பட்டிருக்கின்றன.

அவற்றில் மிக பிரதானமானவையாக:

  1. 2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காண்பதென கடந்த தேர்தல்களின் போது இப்போது ஆட்சியில் இருக்கின்ற கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்திருந்ததின் படி 2016 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினை தீர்ப்பதற்கான அரசியல் தீர்வுக்கான மசோதா பாராளுமன்றத்தில் சமர்பிக்க படல் வேண்டும் என்று கூறுகின்ற ஒரு தீர்மானம் இன்று தமிழர் சமூக ஜனநாயக கட்சியினுடைய மத்திய கமிட்டியினால் தீர்மானிக்க பட்டிருக்கிறது.
  2. இப்போது இருக்ககூடிய ஆட்சியினர் இலங்கையின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள போவதாக கூறியிருந்தார்கள். அதற்காக அங்கங்கே சில வேலைத்திட்டங்கள் அவர்கள் எடுத்திருகின்றார்கள் என்பது மறுப்பதுகில்லை ஆனால் இலங்கையின் இனங்களுக்கிடையில் ஒரு விரைவான நல்லிணக்க முயற்சிகள் இங்கே தேவைப் படுகின்றன. அந்த நல்லிணக்கங்களை உருவாக்க கூடிய முழுமையான ஒரு திட்டத்தை தீட்டி நடைமுறைகளை இந்த அரசாங்கம் விரிவாகவும் தீர்மானகரமாகவும் இரண்டு பகுதி மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் பேசு பேசுகின்ற மக்கள் மத்தியிலும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான அத்தனை நடவடிக்கை களையும் நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள அத்தனை விபரங்கள் தொடர்பாகவும் ஒரு தீர்மானகரமாக இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கூறுகின்ற தீர்மானங்களையும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியுடைய மத்திய கமிட்டி தீர்மானித்து இருக்கிறது.
  3. இலங்கையுடைய அரசாங்கம் ஒரு நல்லாட்சி அரசாங்கமாக செயல்படும் என்று இப்போதுள்ள அரசாங்கம் தெரிவித்து மக்களுடைய ஆணையை பெற்று பதவிக்கு வந்திருக்கிறது. நல்லாட்சி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வை தருவதாக அமைய வேண்டும். மக்களின் அபிவிருத்தி முன்னேற்று வதாக அமைய வேண்டும். மக்கள் தங்களுடைய வருமானத்துக்குள் நிறைந்த வாழ்வை பெறக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இங்குள்ள நிலைமைகளைப் பொறுத்த வகையில் பொருளாதார நடவடிக்கைகள் என்பதை இப்போதுள்ள அரசாங்கம் நிறுத்தி வைத்திருப்பது போல தெரிகிறது. பொருட்களின் விலைகளோ மக்கள் தாங்க முடியாதளவுக்கு இருக்கின்றது. எனவே இந்த நிலைமைகளை மாற்றி பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மக்களுடைய அன்றாட வாழ்க்கைகளோடும் மக்களுடைய அன்றாட தேவைகளோடும் தொடர்பு பட்ட சகல விடயங்களையும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைவு படுத்த வேண்டும். இலங்கையினுடைய மக்கள் அவர்களுடைய வருமானத்துக்குள் மகிழ்சியாக வாழக்கூடிய வகையில் அவர்களுடைய அன்றாட தேவைகளுக்கான பொருட்களுடைய விலைகள் குறைந்தவையாக இருக்கின்ற நிலைமை உருவாக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைக்க முடியாவிட்டால் மக்களுடைய வருமானங்களை கூட்டுகின்ற வேலையினை செய்யவேண்டும். அபோதுதான் நல்லாட்சி என்பது முறையானதாய் இருக்கும்.

இந்த அடிபடையான விடயங்களை கூறுகின்ற தீர்மானங்களை தமிழர் சமூக ஜனநாயக கட்சியினுடைய மத்திய கமிட்டி தீர்மானித்து இருப்பத்தோடு, தமிழர் சமூக ஜனநாயக கட்சியை ஒரு இனவாதம் அற்ற ஒரு முற்போக்கான புரட்சிகரமான கட்சி அமைப்பாக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகரசபைகள், நகரசபைகள் ஒவ்வொன்றினதும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அதற்கான கிளைகளை ஆரம்பித்து அடிப்படைக் கிளைகளை ஆரம்பித்து பிரதேச சபைகள் தோறும் அமைப்புக்களை உருவாக்கி மாவட்டங்கள் தோறும் மாவட்டங்கள் தோறும் அமைப்புகளை உருவாக்கி பரந்துபட்ட மக்களுடைய ஒரு ஜனநாயக அமைப்பாக பிரமுகர்களின் கட்சியாக அல்லாமல் தேர்தல்களுக்கு மட்டும் மக்களை அணுகுகின்ற பிரமுகர்களின் கட்சி என்று இல்லாமல் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகளாக மக்களோடு வாழ்கின்றவர்களாக மக்களுடைய நன்மைகளோடு தொடர்புபட்டவர்களை இருப்பவர்களை கொண்ட உறுப்பினர்களை கொண்ட ஒருகட்சி ஒன்றை கட்டி அமைக்க வேண்டும் அதற்கான வேலைத்திட்டங்களை மிகவிரைவாக விரைவு படுத்தத் வேண்டும் என்பதையும் இன்றைய தமிழர் சமூக ஜனநாயக கட்சியினுடைய மத்தியகமிட்டி கூட்டம் தீர்மானித் திருக்கிறது.

இதைவிட பல்வேறு விடயங்கள் பேசபட்டிருந்தாலும் மிகவும் பிரதானமான விடயங்களை இங்கு நான் சுட்டிக்காட்டி இருக்கின்றேன். இன்றைய தமிழர் சமூக ஜனநாயக கட்சியினுடைய மத்தியகமிட்டி கூட்டம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் வெற்றி கரமானதாகவும் அமைத்திருக்கின்றது. கூடத்தில் பங்கு பற்றிய மத்தியகமிட்டி உறுப்பினர்களோடு இணைந்து வேறுபல உறுப்பினர்களும் பங்கு பற்றினர்கள். எல்லோருடைய கருத்துக்களும் உற்சாகத்தை தருவனவையாகவும் ஒற்றுமையோடு இந்த கட்சியினை மிகவும் தீவிரமான முறையில் மக்கள்மத்தியில் ஒரு செல்வாக்கினை செலுத்துகின்ற வகையில் இதனை கட்டியெழுப்புகின்ற வேலை திட்டங்களில் அனைவரும் ஈடுபடுவதெனவும் உறுதி எடுத்து கொண்டுள்ளனர்.