ஒரு பச்சை மிளகாய் 15 ரூபாய்

பச்சை மிளகாய் காய் ஒன்று இன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு  பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறுகின்றனர்.