கடும் பனியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 39ஆவது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய 6ஆவது கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் முக்கியமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.

டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர்.