பழங்குடியை பிரதிபலிக்குமாறு தேசிய கீதத்தை மாற்றிய அவுஸ்திரேலியா

இன்றிலிருந்து அவுஸ்திரேலியாவானது தங்களது தேசிய கீதத்தின் வித்தியாசமான வடிவமொன்றை பாடவுள்ளது. சொற்களின் மாற்றமொன்றை அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்தே தேசிய கீதமானது வித்தியாசமான வடிவமொன்றில் பாடப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் நீண்ட பழங்குடியின வரலாற்றைப் பிரதிபலிக்கும் முயற்சியொன்றாக அவுஸ்திரேலியாவை இனி தேசிய கீதமானது இளமையான மற்றும் சுதந்திரமான எனக் குறிப்பிடாது. “நாங்கள் இளமையானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள்” என்பதற்குப் பதிலாக “நாங்கள் ஒன்றானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள்” என இசைக்கப்படவுள்ளது.