காணாமற் போனோர் உறவுகளை மிரட்டிய சிவாஜிலிங்கம்!

தமிழ் மக்கள் ஏதாவது ஓர் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தினால் ஓடிவந்து அங்கிருந்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதில் சிவாஜிலிங்கம் முதல்வர்! மாவீரர்கள் தினம் வந்துவிட்டால் கோவிலுக்குப் போகும் இதர பக்தர்களுடன் போவிலுக்கு மூன்று பேருடன் நுழைந்து, கற்பூரம் பொளுத்திவிட்டு, அதனைப் படம் பிடித்து, மாவீரர் தினம் கொண்டாடியதாக கதை விடும் இவர், காணாமற்போனோரது உறவுகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இதுவரை அழையா விருந்தாளியாக தலைகாட்டி வந்தார். இவர் போன்ற சிலர் இடையில் கலந்துகொண்டு, அரசியல்லாபம் தேடிக்கொள்வதால் தங்களது கோரிக்கைள் எடுபடாததை உணர்ந்த காணாமற்போனவர்களது உறவினர்கள், இவருக்குத் தெரியாமல் நேற்றைய தினம் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை யாழ் பஸ் நிலையத்தில் ஆரம்பித்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பார்த்திராத சிவாஜிலிங்கம், அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தொலைபேசி எடுத்து, ‘எனக்கு சொல்லாமல் ஏன் இதனை செய்தீர்கள்? ஏதாவது பின்விளைவுகள் வந்தால் யார் பொறுப்பு? இனிமேல் என்னிடம் சொல்லாமல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என மிரட்டியுள்ளார். அரசியலில் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள்!