கிழக்கில் அமல், பிள்ளையான், கருணா, டக்ளஸ், கணேசமூர்த்தி, வரதராஜப்பெருமாள் மற்றும் பலர் இணையும் கூட்டு கட்சி உதயம்

(க.விஜயரெத்தினம்)
கிழக்கின் மண்ணை பாதுகாப்பதற்காகவும், கிழக்கு மக்களின் அதிகார மையங்களை பெற்று கிழக்கு தமிழ் மக்களுக்கான எதிர்காலத்தை வழிநடாத்துவதற்காகவும், ஒரே குடையின்கீழ் ஒற்றுமையுடனும், எல்லோரும் பொதுவாக இணைந்து பயணிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்திருந்தார்.