கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் விவசாய பீடம் அமைந்துள்ள தொகுதியின் நுழைவாயிலில் ஆரம்பமான பேரணி, கொம்மாதுறை – திருவள்ளுவர் வீதியூடாக சென்று, மட்டக்களப்பு – திருமலை வீதியில் அமைந்துள்ள  வந்தாறுமூலை பிரதான வளாகம் வரை சென்றது.

பிரதான வீதியில் ஒன்றுகூடிய மாணவர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு இல்லை, எண்ணெய் இல்லை, மின்சாரம் இல்லை, கேஸ் இல்லை, பொருள்களின் விலை, வரிச்சுமைகளை குறையுங்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.