கொவிட் 19: தொற்றிலிருந்து 807 பேர் குணமடைந்தனர்

கம்பஹா பொதுச் சந்தையில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக நேற்று(06) மாலை தொடக்கம் பொதுச் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து,  58 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில், 18 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கொவிட் தொற்றாளர்களாக நேற்று(06) அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, பதுளை மாவட்டத்தில் 197 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக கொழும்பில் 116 பேரும், கம்பஹாவில் 102 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.